நடிகர் விஜய்யை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சந்தித்த போட்டோக்கள் இணையத்தில செம வைரலாக வலம் வருகிறது. நடிகர் விஜய்,நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். பீஸ்ட் படத்தின் முதல் இரு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது, மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. நடிகர் விஜய்யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியும் சந்தித்திருக்கிறார்கள். விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் இன்று சென்னையில் அருகருகே நடந்துள்ளது. இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. காணக் கிடைக்காத படங்களை விஜய் ,தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பார்த்தும், பகிர்ந்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.