சென்னை : அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி உள்ளது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இப்போது தான் 4 சீசன் முடிந்து. ஆனால் இந்தியில் 14 சீசன்கள் முடிந்துள்ளன. தமிழில், விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன்5ல் இளம் ஜோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி முதன்முறையாக, 2018 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். பிக்பாஸ் 7 மொழிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி உள்ளது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இப்போது தான் 5 வது சீசன் துவங்க உள்ளது. ஆனால் இந்தியில் 14 சீசன்கள் முடிந்து விட்டது.