கதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள மூவருக்கு கொரோனா!


வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கதிர்காமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது. கதிர்காமம் ஆலயத்தின் நிர்வாகத்திலுள்ள சிலருக்கு தொண்டை வலி, தடிமன் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகள் தென்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த இடத்தில் கடமையாற்றிய ஐவர் தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட Antigen பரிசோதனைகளின் ஊடாக, மூவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது