
பிரதான செய்திகள்:யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த சாட்சிகள் கிடைக்காத நிலையில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதியைச் சேர்ந்த மாணவனொருவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளான்.
சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் ஜெலி ஆகியவற்றை உண்ணக்கொடுத்து பின்னர் மூன்று பேர் அவரை அழைத்துச் சென்றதாகவும் அவர்களின் பெயர்களையும் சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.இதனடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸார் தற்போது தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.